டென்மார்க் பகிரங்க பெட்மிண்டன் – ஜப்பான் வீராங்கனை சாம்பியன்!

Monday, October 19th, 2020

டென்மார்க் பகிரங்க சர்வதேச பெட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் நஜோமி ஒகுஹரா, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

டென்மார்க் பகிரங்க சர்வதேச பெட்மிண்டன் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை (ஸ்பெயின்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

ஒகுஹரா 2 ஆண்டுக்கு பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும். ஆண்கள் பிரிவில் சக நாட்டவரான ரஸ்மஸ் ஜெம்கேவை வீழ்த்தி டென்மார்க்கின் ஆன்டோன்சென் மகுடம் சூடிகொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: