டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பயிற்சியாளர் பெக்கரை பிரிந்தார்!

முன்னணி டென்னிஸ் வீரர் 29 வயதான நோவக் ஜோகோவிச், முன்னாள் ஜம்பவான் பயிற்சியாளர் போரிஸ் பெக்கரை பரஸ்பரம் அடிப்படையில் பிரிந்துள்ளார்.
முன்னணி டென்னிஸ் வீரர் 29 வயதான நோவக் ஜோகோவிச்சுக்கு (செர்பியா), முன்னாள் ஜாம்பவான் போரிஸ் பெக்கர் (ஜெர்மனி) கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வந்தார். அவரது பயிற்சியின் கீழ் 6 கிராண்ட்ஸ்லம் பட்டங்களை வென்றார்.
இந்த நிலையில் ஜோகோவிச், பரஸ்பரம் அடிப்படையில் தனது பயிற்சியாளர் போரிஸ் பெக்கரை பிரிந்துள்ளார். ஜோகோவிச் கூறுகையில், ‘போரிஸ் பெக்கருடன் கைகோர்த்த பிறகு நிர்ணயித்த இலக்குகளை முழுமையாக அடைந்து விட்டேன். அவரது ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு, உழைப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
கடந்த ஜூன் மாதம் பிரெஞ்பகிரங்கத்தில் முதல் முறையாக கைப்பற்றிய ஜோகோவிச்சுக்கு, அதன் பிறகு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் தோல்வியை தழுவினார். ரியோ ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஏ.டி.பி. உலக சுற்றுலா பட்டம் மற்றும் ‘முதனிலை’ இடத்தை இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவிடம் பறிகொடுத்தார். தற்போது உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து விழுந்த அடி காரணமாகவே அவர், பெக்கரை பிரிந்ததாக கூறப்படுகிறது.
போரிஸ் பெக்கர் கூறுகையில், ‘ஜோகோவிச் கடந்த 6 மாதங்களாக களத்தில் பயிற்சிக்கு அதிகமான நேரத்தை செலவிடவில்லை. இது அவருக்கே தெரியும். வெற்றி என்பது, ஒரு பட்டனை அழுத்தினால் வரக்கூடியது அல்ல. அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். அதில் ஜோகோவிச் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
Related posts:
|
|