டென்னிஸ் தரவரிசை: ஆன்டி முர்ரே முதலிடம்!

Thursday, August 3rd, 2017

உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார் இருக்கிறார்.

உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முதலிடத்தில் தொடருகிறார்.

ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் கால்இறுதியில் வெளியேறிய செர்பியா வீரர் ஜோகோவிச் 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார்.

வரும் சீசனில் ஜோகோவிச் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் தர வரிசையில் மேலும் சரிவை சந்திக்க நேரிடும். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே 3 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஹம்பர்க் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற அர்ஜென்டினா வீரர் லீனார்டோ மேயர் 89 இடங்கள் ஏற்றம் கண்டு 49-வது இடத்தை பெற்றுள்ளார்.

 

Related posts: