டு பிளசிஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை – ஐசிசி!
Monday, January 7th, 2019தென்ஆபிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தொடர்ந்து விளையாடிய, தென்ஆபிரிக்கா முதல் இன்னிங்சில் 431 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் 2 வது இன்னிங்சில் 294 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதை அடுத்து, 41 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆபிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 43 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் போது தென்ஆபிரிக்கா பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், தலைவர் டு பிளசிசுக்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது, மேலும், டு பிளசிசுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதித்துள்ளது ஐசிசி.
Related posts:
|
|