டி20 தரவரிசை: கோலி தொடர்ந்து முதலிடம்!

Friday, February 3rd, 2017

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

2-ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்சைவிட 28 ரேங்கிங் புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளார் கோலி. ஆஸ்திரேலியாவின் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேனான கிளன் மேக்ஸ்வெல் 3-ஆவது இடத்தில் உள்ளார்.கோலி, டெஸ்ட் தரவரிசையில் 2-ஆவது இடத்திலும், ஒரு நாள் போட்டி தரவரிசையில 3-ஆவது இடத்திலும், டி20 தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளார்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் இரு இடங்கள் முன்னேறி 5-ஆவது இடத்தையும், இந்திய வீரர் கே.எல்.ராகுல் 15 இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பெளலர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் முதலிடத்திலும், இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா 2-ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரீ 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல், இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 92 இடங்கள் முன்னேறி 86-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

2-ஆவது இடத்தில்இந்தியா: அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் நியூஸிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஓர் இடம் முன்னேறி, 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

virat-kohli-pti-m

Related posts: