டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

Monday, February 13th, 2017
பார்வையற்றோருக்கான டி20 உலக கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழத்தி இந்திய அணி உலக கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

பார்வையற்றோருக்கான டி20 உலக கிண்ண தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.

இன்று பெங்களூர், எம்.சின்னசாமி மைதானத்தில் நடந்த இத்தொடரின் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் Badar Munir 57 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய தரப்பில் Jaffar Igbal, கேதன் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய இந்திய அணி, 17வது ஓவரில் 1 இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழத்தி உலக கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்திய அணித்தலைவர் Prakasha Jayaramaiah ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்கள் குவித்தார். உலக கிண்ணத்தை வென்ற பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: