டி வில்லியர்ஸ் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Thursday, May 24th, 2018

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ், இவர் கடந்த 2004ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக போர்ட் எலிசபெத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்காக அறிமுகமானார்.

அதன் பின் ஒருநாள் போட்டிகள், டி20-களில் காலடி எடுத்து வைத்த டிவில்லியர்ஸ் மைதானத்தில் பந்து வீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்து 360 டிகிரி வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த டிவிலியர்ஸ், ஒருநாள், டி-20 போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.

34 வயதான இவர் இன்று திடீரென அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

அடுத்த ஆண்டு நடைபெறு உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், டிவில்லியர்சின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இதுவரை தென் ஆப்ரிக்க அணிக்காக 114 டெஸ்ட் (8765 ஓட்டங்கள்), 228 ஒருநாள் (9577 ஓட்டங்கள்), 78 டி-20 (1672 ஓட்டங்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

டிவில்லியர்ஸ் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Related posts: