டில்ஷானின் பரியாவிடையன்று உண்மைகள் வெளிவருமா?

இலங்கை கிரிகெட் வீரர் டில்ஷான் தனது கடைசி போட்டியில் பல்வேறு உண்மைகளை சொல்லவிருப்பதாகவும் இதனால் பல தகவல்கள் வெளிவரலாம் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஸ்ர வீரரான டில்ஷான் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.
அப்போது தனக்கு அணித்தலைவர் பதவி மிகவும் கடினமாக இருந்ததாகவும், சிரேஸ்ர வீரர்களாக இருந்த ஜெயவர்த்தன, சங்கக்காரா, மேத்யூஸ் ஆகியோர் தான் தலைவராக செயல்பட்ட போது ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியோடு டில்ஷான் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடைபெறவிருக்கிறார்.அப்போது அவர் பல்வேறு உண்மைத் தகவல்களை வெளிப்படையாக கூற இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியாவை பற்றி குற்றச்சாட்டுகளும் இதில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால் டில்ஷான் தன்னை பற்றி ஏதும் கூறி பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதால் சனத் ஜெயசூரியா கடைசி டி20 போட்டிக்கு முன்னதாகவே வெளிநாட்டுக்கு சென்று விட திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் வெளியாகி இருக்கிறது.
Related posts:
|
|