டில்சானை வழியனுப்ப 45 000 ரசிகர்கள்!

Tuesday, August 30th, 2016

தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியைக் கண்டுகளிக்க சுமார் 45,000 பேர் வருகைத் தந்திருந்தாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

18,000 ரசிகர்களே அமர்ந்து கண்டுகளிக்கும் வசதிகளைக் கொண்ட குறித்த மைதானத்தில் அன்றையதினம் அதிக ரசிகர்கள் வருகைத் தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட ரசிகர்களுக்கு ஆசனங்களை வழங்க முடியாது போனதாகவும் கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடம் மனவருத்தத்தினையும் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றுமுன்தினம்  அதிகமான ரசிகர்கள் வருகைத் தந்தமையினால் அவர்களை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான ஒரு நிலைமை இனிமேலும் ஏற்படாது எனவும் கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்சான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுத்துள்ளார். இந்நிலையில், அதிக ரசிகர்கள் குறித்த போட்டியினைப் பார்வையிட வந்திருந்தததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: