டிலக்சன் சிறப்பாட்டம் ஹென்றிஸ் அணி வெற்றி!

கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் Kings Of Jaffna 2018 மாபெரும் உதைபந்தாட்டத் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஹென்றிஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து பொலிகை பாரதி விளையாட்டுக் கழகம் மோதியது.
டிலக்சனின் சிறப்பான கோலினால் 01:00 என்கின்ற கோல் கணக்கில் ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
இப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹென்றிஸ் அணி வீரர் டிலக்சன் தெரிவு செய்யப்பட்டார்.
இவ் வெற்றியின் மூலம் ஹென்றிஸ் அணி அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது.
Related posts:
T-20 உலக கோப்பையை கொண்டாடும் கூகுள்!
இலங்கை அணி வெற்றி!
இந்தியன் ப்ரீமியர் லீக் - மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி!
|
|