டயமன்ஸ், இமையாணன் மத்தி. அணிகளுக்குத் தடை!

Saturday, March 17th, 2018

மைதானத்தில் மோதல் போக்கில் ஈடுபட்டமைக்காக வதிரி டயமன்ஸ் மற்றும் இமையாணன் மத்தி அணிகளுக்கு ஆறு மாத காலத்துக்குத் தடை விதித்தது வடமராட்சி கால்ப்பந்தாட்ட லீக். இரண்டு வீரர்களுக்கு ஒரு வருட காலத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் நடத்திய கால்ப்பந்தாட்டத் தொடரில் கடந்த மூன்றாம் திகதி நடைபெற்ற ஆட்டத்தில் இமையாணன் மத்தி அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் டயமன்ஸ் அணி ஓர் கோலைப் பதிவு செய்து முன்னிலை வகித்தது. அந்த அணி இரண்டாவது கோலைப் பதிவு செய்வதற்காக முயன்றபோது டயமன்ஸின் வீரர் பிறேம்குமாருக்கும் இமையாணன் மத்தியின் வீரருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்த வடமராட்சி கால்ப்பந்தாட்ட லீக், இரண்டு அணிகளுக்கும் தலா ஆறு மாதங்கள் தடை விதித்தது. பிரச்சினைக்குக் காரணமாக அமைந்தவர்கள் என்று கருதப்படும் டயமன்ஸ் அணியின் பிறேம்குமார் மற்றும் இமையாணன் மத்திய அணியின் கலையமுதன் ஆகியோருக்கு தலா ஒரு வருடமும் தடை விதிக்கப்பட்டது

Related posts: