டயமன்ஸ் அணி எல்லேயில் சம்பியன்

Thursday, February 22nd, 2018

கரவெட்டி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லேயில் வதிரி டயமன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

அல்வாய் மனோகரா விளையாட்டு கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்த இறுதியாட்டம் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் வதிரி டயமன்ஸ் அணியை எதிர்த்து இமையாணன் இளைஞர் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இமையாணன் இளைஞர் அணி 40 பந்துகளில் 12 இலக்குகளை இழந்து 8 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமான பிரியங்கன் 3 ஓட்டங்களையும், மணாளன் 2 ஓட்டங்களையும், கலி, பிருந்தாபன், மகிந்தன் ஆகியோர் தலா ஓர் ஓட்டத்தையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டயமன்ஸ் அணி 40 பந்துகளில் 11 இலக்குகளை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமான விஜியேந்திரன் 4 ஓட்டங்களையும், இராகுல் 3 ஓட்டங்களையும், சாகித்தியன் 2 ஓட்டங்களையும், பீமா, மதன், துசிகரன், துவாரகன் ஆகியோர் தலா ஓர் ஓட்டத்தையும் பெற்றனர்.

5 ஓட்டங்களால் பின்தங்கிய இமையாணன் இளைஞர் அணி தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய 40 பந்துகளில் 11 இலக்குகளை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றது. பிரியங்கன் 7 ஓட்டங்களையும், கலி 3 ஓட்டங்களையும், செந்தாளன், உதயசீலன் ஆகியோர் தலா ஓர் ஓட்டத்தையும் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டயமன்ஸ் அணி 26 பந்துகளில் 4 இலக்குகளை மாத்திரம் இழந்து கிண்ணம் வென்றது.

Related posts: