டக் அவுட் ஆவதில் சாதனை படைத்த ரோகித் சர்மா
Saturday, February 24th, 2018
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா டாலாவின் முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக் அடித்தார்.
இது டி20 கிரிக்கெட்டில் அவரது 4-வது டக் அவுட் ஆகும். இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். யூசுப் பதான், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் டி20 போட்டிகளில் 3 முறை டக் அவுட்டான வீரர்கள் என்ற பெயருக்கு சொந்தகாரர்களாக இருந்த நிலையில் சர்மா அதை முறியடித்துள்ளார்.
Related posts:
ஆசிய செவென்ஸ் ரக்பி தொடர் : இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வி!
" எல்லே" தொடர்: இறுதிக்குள் நுளைந்தது சென். பற்றிக்ஸ்!
பாகிஸ்தான் உடனான போட்டிகளில் இந்திய அணி விளையாட மாட்டாது!
|
|