ஜோரூட் ஆட்டமிழப்பு சர்ச்சை: போட்டி நடுவரிடம் இங்கிலாந்து முறையீடு!

Tuesday, January 31st, 2017

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ரி−20 போட்டியில் ஜோரூட் ஆட்டமிழப்பு சர்ச்சை குறித்து போட்டி நடுவரிடம் தெரிவிக்க உள்ளதாக இங்கிலாந்து அணி தலைவர் தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ரி−20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 144 ஓட்டங்கள் எடுத்தது. 145 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 139 ஓட்டங்களே எடுத்தது.

பரபரப்பான ஆட்டத்தின் கடைசி ஒவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பும்ரா அந்த ஓவரை சிறப்பாக வீசி, வெறும் 2 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் (ஜோருட், பட்லர்) சாய்த்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில், கடைசி ஓவரில் ஜோரூட் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. பும்ரா வீசிய முதல் பந்தில் அவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ கொடுத்தார். ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் பந்து துடுப்பில் பட்டு தான் காலில் விழுந்தது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே டிஆர்எஸ் முறையை பயன்படுத்திவிட்டதால், இப்போட்டியில் அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை.

எனவே, நடுவரின் இந்த முடிவால் இங்கிலாந்து தலைவர் மோர்கன் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தார். இதுகுறித்து போட்டி நடுவரிடம் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

‘அடுத்த போட்டிக்கு முன்னதாக நடுவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வழக்கமாக, போட்டி முடிந்ததும் நடுவர் மூலம், எங்கள் கருத்துகக்ள் அடங்கிய அறிக்கையை வழங்குவோம். இந்த முறை, ஜோரூட்டின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு குறித்தும் அதில் பதிவு செய்வோம்’ என்றார் மோர்கன்.

77col144953093_5177815_30012017_AFF_CMY

Related posts: