ஜொலிஸ்ரார் வெற்றிக் கிண்ணம் 2 ஆவது சுற்றில் யாழ். சென்றல் அணி!

Thursday, August 2nd, 2018

ஜொலிஸ்ரார் வெற்றிக் கிண்ணத்திற்காக ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்தும் 30 பந்துப் பரிமாற்றங்களைக்கொண்ட சுற்றுப்போட்டியின் முதலாவது சுற்றில் 3 ஆவது போட்டி கடந்த சனிக்கிழமை கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் யாழ் சென்றல் அணி பற்றீசியன்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சென்றல் அணி 30 ஓவர்களில் 7 இலக்குகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

லதூஸன் -29, றஜீவ்குமார் -34, மதூஸன் -41, நிரோஜன் – 25 ஓட்டங்களைப் பெற்றனர். களத்தடுப்பில் பற்றீசியன்ஸ் அணியை சார்ந்த றதீஸன் -01, றோபேட் – 03, டனேசியஸ் – 01 இலக்கினை கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பற்றீசியன்ஸ் அணி 29.2 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

தனூஸன் – 42, கஸ்ரோ – 36, றதீஸன் – 42 ஓட்டங்களைப் பெற்றனர்.

கரிகரன் – 1, சுபாதீஸ் -1, தீபன் – 1, கிரிசான் – 2, றஜீவ்குமார் – 1, லதூஸன் – 3 இலக்கினை கைப்பற்றினர்.

இப்போட்டியின் மூலம் யாழ் சென்றல் விளையாட்டுக் கழகம் 9 ஆவது ஆண்டாக நடத்தும் தரவரிசை பட்டியலுக்கு யாழ் சென்றல் அணி 6.02 புள்ளிகளையும் பற்றீசியன்ஸ் அணி 2.44 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: