ஜொலிஸ்ரார் கிரிக்கெட் தொடரில் KCCC அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது சென்றலைட்ஸ்!

Thursday, October 4th, 2018

ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்திய ஜொலிஸ்ரார் வெற்றிக் கிண்ணத்துக்கான துடுப்பாட்டத் தொடரில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியனானது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கே.ஸி.ஸி.ஸி. விளையாட்டுக் கழக அணி 33.3 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்¬றது.

அதிகபட்சமாக சத்தியன் 55 ஓட்டங்களையும், சாம்பவன் 40 ஓட்டங்களையும், பிரதாப் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மயூரன் 4 இலக்குகளையும், ஜெரிக்துசாந் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.

154 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி 30.3 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

அதிகபட்சமாக டார்வின் ஆட்டம் இழக்காமல் 58 ஓட்டங்களையும், ஜெரிக்துசாந் 41 ஓட்டங்களையும், செல்ரன் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரதாப் 3 இலக்குகளையும், சாம்பவன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்

Related posts: