ஜேர்மனி உரைபந்தாட்ட அணித் தலைவர் ஓய்வு!

Saturday, July 30th, 2016

ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் தலைவர் Bastian Schweinsteiger தாம் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

31வயதான அவர், Manchester United கழகத்திற்காகவும் விளையாடியுள்ளார். 2014ஆம் ஆண்டு பிரேசிலில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஜேர்மனிய அணி வெற்றிப்பெற்றபோது அதில் பங்கேற்றார்.

ஜேர்மனியின் கால்பந்தாட்ட அணியிலிருந்து அண்மைக்காலத்தில் விலகும் முக்கியமான நான்காவது வீரராக Bastian Schweinsteiger கருதப்படுகிறார்.ஜேர்மனிக்கு 2014ஆம் ஆண்டு உலககிண்ணத்தை பெற்றுக்கொடுத்தமையை போன்று மீண்டும் தம்மால் பெற்றுக்கொடுக்கமுடியாது.

எனவே தமது பயணத்தை இடைநிறுத்தியதாக குறிப்பிட்டுள்ள அவர், 2018ஆம் ஆண்டின் உலகக்கிண்ண போட்டிகளுக்காக ஜேர்மனி அணிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Related posts: