ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கட்டில் உயர் பதவி!

Wednesday, July 3rd, 2024

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு உயர் பதவி வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அதன்பின் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவித்துள்ளது.

குறித்த தொடரானது இந்த மாதம் 10 ஆம் திகதி(ஜூலை 10) ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி ஜூலை 10 ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடரானது ஜூலை 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதலிரெண்டு டெஸ்ட்டில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின் முதல் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், எஞ்சியிருக்கு போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ரோப் கீ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

41 வயதான ஜேம்ஸ் அண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 ரி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதில் 32 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

00

Related posts: