ஜிம்பாப்வே தொடரில் இலங்கை அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா?

Thursday, September 28th, 2017

இலங்கை அணியினர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என தான் நம்புவதாக ஜிம்பாப்வே அணி தலைவர் கிரேம் கிரீமர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. முக்கியமாக கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரை இலங்கை 2-3 என்ற கணக்கில் இழந்தது.கிரிக்கெட் சூதாட்டத்தில் இலங்கை அணி ஈடுபட்டதா என சிலர் கேள்வியெழுப்பி வரும் நிலையில் அதற்கான சிறிய ஆதாரங்கள் கூட கிடைக்கவில்லை இது குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி தலைவர் கிரேம் கீரீமர், சூதாட்டம் போன்ற விடயங்களில் இலங்கை அணியினர் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

அவர்கள் தங்கள் நாட்டையும், கிரிக்கெட்டையும் அதிகம் நேசிக்கிறார்கள். இதுகுறித்து அதிகம் பேச எதுவுமில்லை. நாங்கள் சிறப்பாக விளையாடியதால் தான் இலங்கை தொடரை கைப்பற்றினோம் அந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு கிடைத்த புகழை யாரும் தட்டி பறித்து விட முடியாது என கூறியுள்ளார்

Related posts: