ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்: கோஹ்லி, ரோஹித், தவானுக்கு ஒய்வு!

Wednesday, May 18th, 2016

எதிர்வரும் ஜுன்11 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இதன்போது இந்திய-ஜிம்பாப்வே அணிகள் மூன்று ஒரு நாள் போட்டியிலும், மூன்று 20 ஒவர் போட்டியிலும் விளையாடவுள்ளனர். குறித்த சுற்றுப்பயணத்தில் இந்திய நட்சத்திர துடுப்பாட்டக்காரர் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோருக்கு ஒய்வு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக இடைவிடாத கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வரும் கோஹ்லி, ரோஹித், ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் புத்துணர்ச்சியுடன் கலந்து கொள்ள, ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது இருவருக்கும் ஒய்வு அளிக்கப்படும் என்றும், தவானுக்கும் ஜிம்பாப்வே போகும் வாய்ப்பு குறைவாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த சுற்றுப்பயணத்தில் டோனியின் பெயரும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவே, டோனி இல்லாத நிலையில், ரஹானே அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: