ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குகிறார் தினேஷ் சந்திமால்!

Monday, October 31st, 2016

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ், துணைத்தலைவர் சந்திமால் இருவருக்கும் காயம் ஏற்பட்டிருந்ததால் டெஸ்ட் தொடருக்கு ரங்கன ஹேராத் தலைவராக தெரிவு செய்ப்பட்டார்.

ஹேராத் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அவரால் ஒருநாள் தொடரில் விளையாட முடியாது.அணித்தலைவர் மேத்யூஸ் பயணங்கள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் சந்திமாலின் கைவிரல் காயம் குணமடைந்து விட்டதாகவும், அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் செயலாளர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

chandimal_2510535f

Related posts: