ஜார்கண்ட் அணியின் தோல்வி தான் டோனி பதவி விலகியதற்கு காரணம்?

Friday, January 6th, 2017

இந்திய அணியின் வெற்றித்தலைவனாக வலம் வந்தவர் டோனி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இந்திய அணியின் டெஸ்ட் அணித்தலைவராக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராக டோனி இருந்து வந்தார். டெஸ்ட் அணித்தலைவராக இருந்து வந்த கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்து வந்தது. இது டோனிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டோனி நேற்று திடீரென்று தன்னுடைய ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலருக்கு ஒரு வியப்பை ஏற்படுத்தியது.

டோனி ஏன் இந்த திடீர் முடிவை அறிவித்தார், இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் வேலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில், அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்கு வெற்றி இலக்காக அவுஸ்திரேலியா அணி 365 ஓட்டங்களை நிர்ணயித்தது. இதைக் கண்ட டோனி இந்திய அணி வீரர்களை டிரா செய்யும் நோக்கில் ஆடும் படி கூறியுள்ளார்.

ஆனால் கோஹ்லியோ நம்மால் முடியும் We Will Go For Win என்று கூறியுள்ளார். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 315 ஓட்டங்களை குவித்து 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்தியா சற்று கெத்தாக தோற்கிறது.

இதைக் கருத்தில் கொண்ட டோனி தன்னுடைய கருத்து தவறு என்றும் கோஹ்லி கூறியது தான் சரி என்ற முடிவின் காரணமாகத்தான் அன்று டோனி அந்த திடீர் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

டெஸ்ட் அணியின் தலைவராக பதவி வகித்த பின்பு கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வந்தது. ஆனால் டோனியால் சரிவர எதையும் முடிக்கவில்லையே என்று பேச்சு அவ்வப்போது அடிபட்டு வந்தது.

இது ஒரு புறம் இருக்க தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுழற்பந்து மைதானம் என்றால் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்பதற்காக இதை செய்துள்ளனர்.

இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதே போன்று டோனிக்கும் ஒரு அசைன்மெண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தற்போது ரஞ்சி தொடர் நடைபெற்று வருகிறது அல்லவா, அதில் ஜார்கண்ட் அணிக்கு சற்று சப்போர்ட்டாக இருங்கள் என்றும் அதுமட்டுமின்றி ஜார்கண்ட் அணிக்கு கோப்பை பெற்று கொடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த ஜார்கண்ட் அணியோ நேற்று மோதிய அரையிறுதி ஆட்டத்தில் குஜராத் அணியுடன் தோல்வியை சந்திந்தது. இதனால் டோனி, தனக்கு கொடுத்த வேலையை கோஹ்லி சிறப்பாக செய்து விட்டார். ஆனால் நம்மால் அதை செய்யமுடியவில்லை என்பதன் காரணமாகவே இந்த திடீர் முடிவு என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பவர் கும்ப்ளே, பிசிசிஐ தலைவராக போகிறார் கங்குலி, இவர்களை எல்லாம் அணியில் இருந்து ஓரங்கட்டியவர் டோனி என்று கூறப்படுகிறது. அது என்றும் இவர்கள் மனதில் இருக்கும், எப்படியும் தன்னை குறைந்தது 6 மாதம் அல்லது 1 வருடத்திற்குள் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு அடித்தளம் அமைப்பார்கள், அதற்கு முன்னர் தாமே சிறந்த தலைவராக விலகி விடுவோம், கோஹ்லியே இருக்கட்டும் என்று டோனி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

400x400_MIMAGE94b20bf0af94fdb1b243cb71611898eb

Related posts: