ஜாம்பவான்கள் பங்கேற்கும் டி10 கிரிக்கெட் தொடர்!

Thursday, October 5th, 2017

T10 கிரிக்கெட் லீக் போட்டிகள் சார்ஜாவில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த போட்டிகளை இலங்கை, பாகிஸ்தானிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டி10 கிரிக்கெட் போட்டிகள் சார்ஜாவில் வரும் டிசம்பரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஆலோசனை குழுவில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அப்ரிதி, இன்சமாம் உல்-ஹக் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.இதில் மொத்த ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. அதில் ஒரு அணியான Maratha Arabians-ல் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா, வீரேந்திர சேவாக், பகர் ஜமான் உள்ளிட்டோர் இணைந்து விளையாடவுள்ளனர்.

அணியின் இணை உரிமையாளரான பிரபல பாலிவுட் நடிகர் சோஹில் கான் இதுகுறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.வருங்காலத்தில் டி10 போட்டிகளை இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அது குறித்து பேசி வருவதாகவும் இந்த தொடரை நடத்தும் ஷாஜி உல் முல்க் கூறியுள்ளார்.முதல் வருடம் நடக்கும் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்றால் வருங்காலத்தில் சர்வதேச தரத்தில் இப்போட்டிகள் நடத்தப்படும் எனவும் ஷாஜி தெரிவித்துள்ளார்.

Related posts: