ஜயசூரியாவுக்கு நன்றி சொன்ன கோஹ்லி!

Thursday, September 7th, 2017

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்களுக்கு விராட் கோஹ்லி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

இந்நிலையில், கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பலர் தமது ஆசான்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோஹ்லி தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் கிரிக்கெட் உலகை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் எழுதப்பட்ட மிகப் பெரிய போஸ்டருக்கு முன்னால் அமர்ந்திருந்து ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக கிரிக்கெட் உலகில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியவின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: