ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் 100 மீட்டர் ஒட்டப் போட்டியில் வெற்றி!

Sunday, August 14th, 2016

தடகள விளையாட்டு போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவின் விரைவோட்ட வீராங்கனை எலைன் தாம்சன் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

மூன்றாவது தங்கப்பதக்கத்தை வெல்லும் நோக்கில் ஓடிய சக நாட்டு வீராங்கனை ஷெல்லி-அன் கிராசர்-பியேசி இப்போட்டியில் வெண்கலப் பதக்கமே பெற முடிந்தது.

கீழே விழுந்தாலும் மீண்டு ஓடிய பிரிதானிய ஓட்டப்பந்தைய வீரர் மோ ஃபாக், 10 ஆயிரம் மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டியில் இந்த முறையும் முதலிடத்தை தங்க வைத்துள்ளார். மிதிவண்டி மற்றும் படகு சவாரி போன்ற போட்டிகளிலும் பிரித்தானியாவுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

மோனிகா புயுக் என்பவர் பெண்கள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வெற்றதன் மூலம் போர்ட்டோ ரிகோவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை வென்று தந்திருக்கிறார். 400 மீட்டர் பெண்கள் தொடர் ஓட்டப்போட்டியில் அமெரிக்க பெண்கள் அணி தங்கம் வென்றபோது, அமெரிக்கா தன்னுடைய 1000-ஆவது தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது. 23 தங்கப்பதக்கங்களோடு மைக்கேல் பெல்ப்ஸ் ஓய்வு பெறுகிறர். அவருடைய கடைசி வெற்றி ஆண்கள் தொடர் நீச்சல் போட்டியில் இன்று கிடைக்க உள்ளது்

Related posts: