ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பம் கோரல்!

Thursday, September 1st, 2016

கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடத்தும் ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதால் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே கரப்பந்தாட்டப் போட்டிகள் 22 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாக இடம்பெறவுள்ளன.

இப்போட்டிகள் எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளன. பங்குபற்றவுள்ள பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களை எதிர்வரும் 05.ஆம் திகதிக்கு முன்னர் இலக்கம் 104, YMCA வீதி, பாரதிபுரம், கிளிநொச்சி என்னும் முகவரியிலுள்ள கிளிநொச்சி மாவட்டக் கரப்பந்தாட்டச் சங்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அச்சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்

Related posts: