சொன்னதை செய்து காட்டிய டிவில்லியர்ஸ்!
Sunday, May 13th, 2018டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது டிவில்லியர்ஸ் சொன்னது போன்று செய்து காட்டிவிட்டார் என்று கோஹ்லி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் வெற்றிக்கு பின் கோஹ்லி பேசுகையில், இது எங்களுக்கு சரியான நேரத்தில் கிடைத்த வெற்றி, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மைதானத்தில் டெல்லிய அணியை விட எங்களுக்கே ஆதரவு அதிகம் இருந்தது. எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
டிவில்லியர்ஸுடன் இணைந்து விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. இது கடினமான சேஸிங்காகத் தான் இருந்தது.
அப்போது டிவில்லியர்ஸ் கவலைப்படாத, இந்தப் போட்டியில நாம் ஜெயிக்கிறோம் என்று கூறினார். அதன்படியே அணியின் வெற்றிக்கு உதவினார்.
அதுமட்டுமின்றி இந்த போட்டியில் மூன்று ஓவருக்கு முன்பே போட்டியை முடித்துவிட்டு புள்ளிப் பட்டியலில் முன்னேற முயற்சி செய்ததாகவும் கோஹ்லி கூறியுள்ளார்.
Related posts:
|
|