சொந்த மண்ணில் அயர்லாந்தை இலகுவான வெற்றி கண்ட இலங்கை மகளிர் அணி!
Monday, August 12th, 2024அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை 07 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பின்னர் 146 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 16 ஓவர் நிறைவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவு செய்தது.
குறித்த போட்டியில் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மேலும், தொடக்க துடுப்பாட்ட வீரர் விஷ்மி குணரத்ன 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அதன்படி இந்த போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|