சொந்த ஊரில் தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடும் திக்வெல்ல!
Saturday, August 12th, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல எதிர்வரும் போட்டியில் தனது சிறப்பான துடிப்பாட்டத்தை வெளிக்காட்டுவார் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்லேகெலயில் நாளை ஆரம்பமாகவுள்ள சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நிரோஷன் திக்வெல்ல தனது சொந்த ஊரில் விளையாடும் முதல் சர்வதேச போட்டியாகும்.கண்டி திரித்துவ கல்லூரியின் பழைய மாணவரான திக்வெல்ல இலங்கை கிரிக்கட் அணிக்கு பாடசாலை மட்ட கிரிக்கட்டில் இருந்து கிடைத்த மேலுமொரு நட்சத்திரம் என கிரிக் இன் போ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ள அறிக்கையில் கிரிக்கட் விமர்சகர் சித்தார்த் மொங்கியா குறிப்பிட்டுள்ளார்.இவர் தற்போதுவரை 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இதில் 2 சதங்களை பெற்றுள்ளார்.நிரோஷன் திக்வெல்ல இதுவரையில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|