சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலியா உலக சாதனை!

Sunday, April 8th, 2018

பொதுநலவாய விளையாட்டு சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் அணிகளுக்கான 4 கிலோ மீற்றர் தூர சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 நிமிடம் 49.804 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி 3 நிமிடம் 50.265 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

Related posts: