செஸ் தொடர்: இலங்கைக்கு தங்கம்!

ஆசிய பாடசாலை செஸ் போட்டித் தொடரில் இலங்கை ஒருதங்கப்பதக்கமும், 2 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது.சீனாவின் பென்ஜிங் நகரில் நடைபெற்ற 15 வயதிற்கு உட்பட்ட போட்டியில் நீர்கொழும்பு கேட்வே பாடசாலையைச் சேர்ந்த சாராநாத் நாணயக்கார தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
11 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான செஸ் போட்டியில் கொழும்பு விசாகா கல்லூரியை சேர்ந்த வினோலிக் ஒனேத்ரா விதானாரச்சி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், 13 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் குருநாகல் மலியதேவ கல்லூரியை சேர்ந்த இசுறு அம்பவன் விதானகே வெண்கலப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் பங்குப்பற்றுவாரா?
பிரேசிலிடம் அடிவாங்கிய ஸ்பெயின்!
ஐ.பி.எல் தொடர்: புதிய சாதனை படைத்த சுனில் நரேன்!
|
|