சென். ஹென்றிஸை தோற்கடித்து யாழ்ப்பாணம் மத்தி மூன்றாமிடம்

Wednesday, February 21st, 2018

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்திய கால்பந்தாட்டத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மூன்றாம் இடத்தை தனதாக்கியது.

யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மூன்றாம்

இடத்துக்கான ஆட்டத்தில் இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது. 2:1 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது யாழ்ப்பாணம் மத்தி. இரண்டாம் பாதியின் சென்.ஹென்றிஸ் 2 கோல்களையும் மத்திய கல்லூரி ஒரு கோலையும் பதிவு செய்தன. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்களைப் பதிவுசெய்தமையால் சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சம நிலைத் தவிர்ப்பு உதைகளிலும் இரண்டு அணி வீரர்களும் விடாப் போராட்டத்தை

வெளிப்படுத்தினர்.

இறுதி ஆட்டத்துக்குரிய பாணியில் மூன்றாம் இடத்துக்கான இந்த

ஆட்டம் அமைந்தது. முடிவில் ஒருவாறாக 4:3 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைத் தனதாக்கியது.

Related posts: