சென்.மேரிஸை வென்றது மன்னார் சென்.ஜோசப்!

நெற்கொழு கழுகுகள் வி.க நடத்தும் வடமாகாண வல்லவன் உதைபந்தாட்ட சமரில் 05.10.2016 அன்று நடைபெற்ற போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் வி.கழகத்தை எதிர்த்து மன்னார் சென்.ஜோசப் வி.க மோதியது.
இரண்டும் பலம் பொருந்திய அணிகள் மோதிய போட்டியாக அமைந்ததால் விறுவிறுப்பிற்கு குறைவில்லாது பார்வையாளர்களை பரவசப்படுத்தின. முதற்பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நேற்று பிரதேசத்தில் ஏற்பட்ட கைபந்து காரணமாக சென்.ஜோசப் வி.க கிடைக்கப்பெற்ற தண்ட உதையினை ராஜ்கமல் கோலாக மாற்ற 1:0 என சென்.ஜோசப் முன்னிலை பெற்றது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் மிகுந்த உற்சாக ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் கோல் பெறும் வாய்ப்புக்கள் இலாபமாக தடுக்கப்பட ஆட்ட நேர முடிவில் 1:0 என மன்னார் சென்.ஜோசப் வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக சென்.ஜோசப் கோல் காப்பாளர் அனோஜன் தெரிவு செய்யப்பட்டதுடன் அணிக்கான பரிசினை மாதர் சங்கத் தலைவி . பாலமணி வழங்கி கௌரவிக்க பதக்கத்தினை கழக நலன்விரும்பி சீ.சிவநேசன் அணிவித்தார்.
Related posts:
|
|