சென்.பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது!

Thursday, July 14th, 2016

வட மாகாண கல்வி விளையாட்டுத் திணைக்களத்தால் வட மாகாணப் பாடசாலைகளின் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில், 17  வயதுப் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியது.

இச்சுற்றுப்போட்டி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று, இதன் இறுதிப் போட்டியில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி கடந்த வாரயிறுதியில் மோதியது.

முதற் பாதியாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி கோல் ஒன்றை அடித்து முன்னிலை பெற்றது. இருந்தும், இரண்டாவது பாதியாட்டத்தில் பதில் கோலடித்த சென்.பற்றிக்ஸ் அணி போட்டியை சமநிலைப்படுத்தியது.

வழமையான ஆட்ட நேரம் வரையில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றிருந்தமையால், போட்டியின் முடிவு பெனால்டிக்குச் சென்றது. இதில், சென்.பற்றிக்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 2:0 என்ற கோல் கணக்கில் மன்னார் சென்.சேவியர் அணியை வீழ்த்தியது.

Related posts: