சென்.பற்றிக்ஸ் அரையிறுதியில்!

Tuesday, December 11th, 2018

இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனம் 20 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையில் நடத்தும் த பப்பரே வெற்றிக்கிண்ணத்துக்கான தொடரில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு சாகிராக் கல்லூரி அணி மோதியது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல்களைப் பதிவுசெய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அரையிறுதியாட்டங்கள் கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளன. அன்றையதினம் மாலை 5 மணிக்கு சென்.பற்றிக்ஸ் தனது அரையிறுதி ஆட்டத்தில் ஹமிட் அல்குசைன் கல்லூரி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Related posts: