சென்.பற்றிக்சை வீழ்த்தி ஸ்ரீமுருகன் சம்பியன்!

அகில இலங்கை ரீதியில் இளவாலை சென்.ஹென்றீஸ் கல்லூரியினால் 2 ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட புட்சால் உதைபந்தாட்டத் தொடர் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்றது.
இத்தொடரில் 16 வயதுப்பிரிவில் பங்குபற்றிய ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய அணியினர் இறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.
ஆட்டநாயகனாக சமீதன் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயற்பட்ட ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய அணி கிண்ணத்தை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது.
Related posts:
|
|