சென். ஜோன்ஸின் தனபாலன் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான தொடர்:  பற்றிக்ஸ் சம்பியன்!

Friday, April 27th, 2018

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியால் நடத்தப்பட்ட அதிபர் எஸ்.தனபாலன் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான துடுப்பாட்டத் தொடரில் (அணிக்கு ஆறு வீரர்கள் பங்குபற்றும் 5 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட தொடர்) யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி 5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 2 இலக்குகளை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. மொனிக் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் டிலக்சன் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டிலோசியன், வியாசன் இருவரும் தலா ஓர் இலக்கைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 55 ஓட்டங்களைப் பெற்றதை அடுத்து 8 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி.

Related posts: