சென். அன்ரனிஸ் உடற்பயிற்சியில் மீண்டும் மகுடம்!

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சியில் 20 வயது ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுiறை சென். அன்ரனிஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
ஊர்காவற்றுறை சென். அன்ரனிஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இந்தப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை சென். அன்ரனிஸ் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தையும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி இரண்டாமிடத்தையும் பெற்றன. சிறந்த உடற்பயிற்சி வீரராக ஊர்காவற்றுறையின் சென். அன்ரனிஸ் கல்லூரி அணியின் தலைவர் க.ஜெனிஸ்ரன் தெரிவு செய்யப்பட்டார். ஊர்காவற்றுறை சென். அன்ரனிஸ் கல்லூரி அணி 2008 ஆம் ஆண்டு முதல் தேசிய மட்ட உடற்பயிற்சியில் 4 தடவைகள் தங்கப்பதக்கத்தையும் 3 தடவைகள் வெள்ளிப் பதக்கத்தையும் 3 தடவைகள் வெண்கலப்பதக்கத்தையும் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2 வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தோல்வி!
தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை!
சச்சின் அன்றே சொன்னார் - பாண்ட்யா!
|
|