சென்றலைட்ஸ் அணி வென்றது கிண்ணம்!

Wednesday, June 20th, 2018

ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்திய கூடைப்பநதாட்டத் தொடரில் சென்றலைட்ஸ் அணி கிண்ணம் வென்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் தொடரில் இரவு 6 மணிக்கு இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து ஜொலிஸ்ரார் அணி மோதியது.

நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. 18:13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலாவது கால்பாதியைத் தனதாக்கியது ஜொலிஸ்ரார் அணி. இரண்டாம் கால்பாதி ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணி 20:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. முதல் பாதியின் முடிவில் 33:28 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றது சென்றலைட்ஸ் அணி.

மூன்றாம் கால்பாதி ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணி 17:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. நான்காம் கால்பாதியும் 13:09 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சென்றலைட்ஸ் அணியின் வசமானது. முடிவில் 63:51 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது சென்றலைட்ஸ் அணி.

Related posts: