சென்றலைட்ஸ் அணி இறுதிக்குத் தகுதி!

Thursday, May 10th, 2018

கொக்குவில் சனசமூக நிலையம் நடத்தும் யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தொடரில் சென்றலைட்ஸ் அணி இறுதிக்குத் தகுதி பெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து மானிப்பாய் பரிஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் பரிஸ் அணி 26 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது. அதிக பட்சமாக சபேசன் 25, சுஜீவன் 24, அனோஜன் 21 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சசோபன் 3, டார்வின், அலன்ராஜ் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் சாள்ஸ், மயூரன் ஆகியோர் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 23.3 பந்துப் பரிமாற்றங்களில் 5 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டார்வின் ஆட்டம் இழக்காமல் 65, ஜெரிக் துசாந் ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கரிகரன், பனிஸ்ரன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளையும் கிசோக்குமார் ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

Related posts: