சென்னை டெஸ்ட் போட்டி நடப்பது உறுதி –  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி!

Wednesday, December 14th, 2016

சென்னையில் திங்கட்கிழமை வீசிய வர்தா புயல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளத்துக்கும், மைதானத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதனால் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் அங்கு உறுதியாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின், 5-ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த அட்டவணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலர் காசி விஸ்வநாதன் கூறியதாவது: வர்தா புயல் காரணமாக, சேப்பாக்கம் மைதானத்துக்கோ, ஆடுகளத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அங்கு உறுதியாக நடைபெறும். எனினும், புயலின் தாக்கத்தினால் மைதானத்தில் இருந்த காட்சித் திரைகள், ஏ.சி.க்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன் உயர் ஒளிவிளக்குகளில் இருந்து சில பல்புகள் வெடித்துச் சிதறியுள்ளன. இருப்பினும், அடுத்த இரண்டு நாள்களில் இவை அனைத்தும் உறுதியாக சீர்செய்யப்பட்டுவிடும் என்று காசி விஸ்வநாதன் கூறினார்.

இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தார்கள். இன்று சென்னையில் வெயில் அடிப்பதால், இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

chepauk33

Related posts: