சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓட்டங்கள் வெற்றி!

Monday, April 23rd, 2018

ஐபிஎல் போட்டித் தொடரில் இடம்பெற்ற 20 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அதிரடியாக விளையாடிய ஹம்பத்தி ரைடு 37 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

4 ஆறு ஓட்டங்கள் மற்றும் 9 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். சுரேஸ் ரெய்னா ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் , அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அதன்படி , 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் வில்லியம்சன் 84 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.யூசுப் பதான் 45 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் தீபக் சஹார் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

Related posts: