சுழல் பந்துவீச்சுக்கு பயந்தால் இந்தியா செல்ல வேண்டாம் – பீற்றர்சன்!

Saturday, February 4th, 2017

சுழல் பந்தை உங்களால் விளையாட முடியாவில்லை என்றால் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செல்லாதீர்கள் என்று அவுஸ்திரேலியாவிற்கு பீற்றர்சன் அறிவுறுத்தியுள்ளார்.

இம்மாதம் 23ஆம் திகதி இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுழல் பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதை விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களால் சுழல் பந்தை விளையாட முடியவில்லை என்றால் இந்தியா செல்ல வேண்டியதில்லை. நீங்கள் இந்தியாவிற்கு வரும்போது அதற்கென பயிற்சி எடுத்துக்கொள்வீர்கள். நீங்கள் அதற்கான பொதுவான பயிற்சியை அவுஸ்திரேலியாவிலேயே எடுத்துக்கொள்ளலாம். அவுஸ்திரேலியாவில் என்னால் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக துடுப்பாட வீரர்களுக்கு பயிற்சியளிக்க முடியும். உங்களால் முடியும், நீங்கள் சுழல் பந்து விக்கெட்டில் சுழற்பந்தை சரியான முறையில் விளையாட வேண்டிய தேவையில்லை அல்லது சுழற்பந்தில் பயிற்சி எடுக்க வேண்டிய தேவையில்லை.

சரியான லைன் மற்றம் லென்த் எடுத்து உங்கள் காலைக் கொண்டு சென்றால் நீங்கள் எவ்விதமான ஆடுகளத்திலும் விளையாட முடியும். இங்கிலாந்து வீரர்களை போல் நீங்கள் விளையாடினால் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். காலை அதிகளவில் முன்வைத்து விளையாடக்கூடாது. பந்திற்காக காத்திருந்து அதன்பின் விளையாட வேண்டும் பந்து எங்கே பிட்ச் ஆகிறது என்பதைப் பார்த்து அதன்பின் விளையாட வேண்டும். யாரோ ஒருவர் 150 கிரோமீற்றர் வேகத்தில் வீசம் பந்தை உங்களால் எதிர்கொண்டு நல்ல நிலமைக்கு வரமுடியும் என்றால், 50மைல் வேகத்தில் வீசும் பந்தை உங்களால் எதிர்கொள்ள முடியும் என்றார்.

news_18-10-2014_44kevin

Related posts: