சுரேஸ் சுப்பிரமணியத்திற்கு பதவி கொடுத்தது ஒலிம்பிக் சங்கம்!

Sunday, February 25th, 2018

தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்தல் மூலம் சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் சுரேஸ் சுப்பிரமணியமும், ரொஹான் பெர்னாண்டோவும் போட்டியிட்டனர்.  அதில் சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை டெனிஸ்சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், ஆசிய டெனிஸ் சங்கத்தின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தார்.

இந்தத் தேர்தல் 9 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெற்றுள்ள நிலையில் அதில் வாக்களிக்க 31 சங்கங்கள் தகுதிபெற்றிருந்தன.

Related posts: