சுருண்டது இலங்கை!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 117 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி.
அவுஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, 2 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இதற்கான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ளா பல்லிகேலெ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சி முறையில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் ஆடியது, இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கருணரத்னே (5), சில்வா(4) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த குஷால் மெண்டிஷ் 8 ஓட்டங்களில் ஹசல்வுட் பந்து வீச்சீல் ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கபட்ட சண்டிமால்(15), அணியின் தலைவர் மேத்யூஸ் (15) ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய இலங்கை வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 117 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Related posts:
|
|