சுனில் நரைனுக்கு நிங்கியது தடை!

Saturday, April 9th, 2016

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மீதான தடையை விலக்கிக் கொள்ளப் பட்டதாக சர்வதேச கிரிக்கெட் ஆணையம் அறிவித்துள்ளது.

சுனில் நரைன் மீதான பந்து வீச்சு தடையை சர்வதேச கிரிக்கெட் ஆணையம் விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து அவர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் கொல்கத்த அணிக்காக 55 போட்டிகளில் களம்கண்டு 74 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் போது இவரது பந்து வீச்சின் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் சுனில் நரைன் தானாக முன்வந்து விலகிக் கொண்டார்.

இதனிடையே மீண்டும் அணிக்கு திரும்பிய நரேனுக்கு இலங்கை தொடரின் போது பந்து வீச்சு தொடர்பாக மீண்டும் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில் டி20 உலகக் கிண்ண போட்டிகளில் இருந்தும் விலகி இருந்த நரேன், தற்போது இதற்கான சோதனையில் ஈடுபட்டதை அடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் ஆணையம் அனுமதி நளித்துள்ளது

Related posts: