சுதந்திர கிண்ண தொடருக்கான டிக்கற் விற்பனை ஆரம்பம்!

Friday, February 23rd, 2018

இலங்கையின் ஆர் பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான டிக்கற் விற்பனைஆரம்பமாகியுள்ளது.

இந்த டிக்கற்றுக்களை ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமையகத்திலும், ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானத்திலும் கொள்வனவு செய்ய முடியும்.

இவை 300 ரூபா முதல் 5ஆயிரம் ரூபா வரை உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் போட்டியில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டி அடங்கலாக ஆறு ரி-20 போட்டிகள் மார்ச் 18ஆம் திகதிவரைநடைபெறவுள்ளன .

Related posts: