சுதந்திர கிண்ண தொடரில் திடீர் மாற்றம்!

Thursday, February 22nd, 2018

இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்கேற்கும் முக்கோண சுதந்திர கிண்ண தொடரின் நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த மாதம் 8 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த போட்டியை 6 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதனுடன் தொடரின் இறுதிப் போட்டி செவ்வாய்கிழமை நடாத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை அதற்கு முன்னரான ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு எடுத்த தீர்மானம் இந்த திருத்தத்திற்கு காரணம்.

ஞாயிற்றுக்கிழமை அதிகளவான ரசிகர்கள் மைதானத்திற்கு வரக்கூடும் என்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: