சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் நாளை!

Friday, March 4th, 2022

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்படுகின்ற சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியானது நாளை (5) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

குறித்த இறுதிப் போட்டியில் வடமாகாண அணியும் தென்மாகாண அணியும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் இம்மானுவல் ஆனல்ட் இதனை தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் இந்த போட்டிக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றார்

ஊடக சந்திப்பின் ஆரம்பத்தில் மாலைதீவில் உயிரிழந்த இலங்கை உதைபந்தாட்ட வீரர் பியூஸ்லஸ்ஸிற்கும் அஞ்சலி தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: