சுதந்திரக் கிண்ணத் தொடர்: இலங்கை அணி தோல்வி!

Tuesday, March 13th, 2018

சுதந்திர கிண்ண இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் – இடம்பெற்ற 04வது போட்டியில் இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான நிலையில் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது

Related posts: